ஸிம்பாப்வேயை வென்ற இந்தியா

ஹராரே: ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது இந்தியா. இதனால், 2014ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய பிறகு டோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வென்றதில்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பூவா தலையா வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. முதல் 10 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸிம்பாப்வே, 23.2 ஓவரில்தான் 100 ஓட்டங்களை எட்டியது.

34.3 ஓவருக்கு 126 ஓட்டங்கள் மட்-டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஸிம்பாப்வே. சாகல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் விளையாடிய இந்திய அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அறிமுக ஆட்டத்தில் சதமடித்த ராகுல், நேற்றைய ஆட்டத்தில் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!