ஜெர்மனியிடம் வீழ்ந்த உக்ரேன்

யூரோ கிண்ணக் காற்பந்துத் தொடரில் உக்ரேனுடன் மோதிய ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே மூன்று முறை யூரோ கிண்ணத்தை வென்றுள்ள ஜெர்மனி நான்காவது முறையாக அக்கிண்ணத்தைக் கைபற்றும் எண்ணத்தோடு இத்தொடரில் முதல் ஆட்டத்தை ஆடியது. ஜெர்மனியின் டோனி குரூஸ் கடத்திய பந்தை தலையால் முட்டி 19வது நிமிடத்தில் கோலாக்கினார் முஸ்தாபி. உக்ரேன் அணியினர் பலமுறை கோல் போட முயன்றனர். ஆனால், அவர்களை கோலடிக்கவிடாமல் சிறப்பாக தடுத்தாடினார் ஜெர்மனியின் கோல்காப்பாளர் மேனுவெல்.

காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கினார் மேன்யூவின் ஷ்வைன்ஸ்டைகர். அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே அவர் கோலடிக்க, ஜெர்மனியின் வெற்றி உறுதியானது. நேற்று நடந்த மற்றோர் ஆட்டத்தில் வட அயர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது போலந்து. வேறோர் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் துருக்கி, குரோ‌ஷியாவிடம் வீழ்ந்தது. வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள ‘சி’ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் போலந்தை எதிர்கொள்கிறது ஜெர்மனி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி