பிரேசிலை வெளியேற்றிய பெருவின் கோல்

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்­றி­யா­ள­ரான பிரேசிலை யூரோ காற்­பந்து தொடரிலிருந்து வெளி­யேற்­றி­யது சர்ச்சையை உண்டாக்­கிய பெருவின் கோல். கிட்­டத்­திட்ட 30 ஆண்­டு­களுக்­குப் பிறகு, காலி­று­திக்­கு­க்கூட முன்­னே­றா­மல் குழுக்­களுக்­கிடை­யி­லான ஆட்­டத்­தி­லேயே பிரேசில் நடைகட்டியது இதுவே முதல் முறை­யா­கும். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் பிரேசிலை வீழ்த்த முடியாத பெரு, நேற்று நடந்த ஆட்­டத்­தில் 1-0 என்ற கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது.

முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இல்லாமலேயே முடிந்தது. பெருவின் மாற்று ஆட்­டக்­கா­ர­ராக பிற்பாதி ஆட்­டத்­ தில் கள­மி­றங்­கிய ராவுல் ருடியஸ் 75வது நிமி­டத்­தில் முதல் கோலைப் போட்டார். ஆனால், அவர் போட்ட கோலுக்­கான பந்து கைகளில் பட்டுச் சென்ற­தாக பிரேசில் குற்றம் சாட்­டி­யது. ஆனால், அது­பற்றி தனது உதவி­யா­ளர்­களு­டன் ஐந்து நிமி­டங்களுக்கு மேல் கலந்தா­லோ­சித்த நடுவர் அதை கோல் என்று உறு­திப்­படுத்த வெற்றி பெரு பக்கம் சாய்ந்தது. அதன்­பி­றகு காயம் பட்­ட­தற்­கான கூடுதல் நேர ஆட்­டத்­தின்­போது, பெருவின் கோலைச் சமன் செய்யக் கிடைத்த வாய்ப்பைத் தவ­ற­விட்­டார் பிரேசில் ஆட்­டக்­கா­ரர் எலியஸ். அவர் அடித்த பந்து வலைக்­குள் செல்­லா­மல் கோல்­காப்­பா­ளரை மட்டும் தொட்டு சென்றது.

காலி­று­திக்­குள் நுழைய ஒரு புள்ளி மட்டுமே வேண்டும் என்ற நிலையில், சமன் செய்­தி­ருந்தா­லேயே பிரேசிலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் இந்த தோல்­வி­யால், பிரிவு பட்­டி­ய­லில் மூன்றா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்டது பிரேசில். தோல்வி பற்றி பேசிய துங்கா, "வெற்றி பெற­வில்லை என்றால், கடுமை­யான விமர்­ச­னங்களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும். ஆனால், நாங்கள் என்ன செய்­கி­றோம் என்று எங்களுக்­குத் தெரியும்," என்றார். மற்றோர் ஆட்டத்தில், ஹைத்தியை 4-0 என வீழ்த்திய எக்­வே­டார் குழு 'பி' பிரிவில் இரண்டா­வது இடத்தைப் பிடித்ததால் வெள்ளியன்று நடைபெறவுள்ள காலி­று­தியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

எதிரணியின் வலைக்குள் பெரு வீரர் புகுத்திய பந்தை நடுவர் கோல் என்று உறுதிப்படுத்தியதால் ஏமாற்றமடைந்த பிரேசில் ஆட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!