சொந்த கோலால் வெற்றி வாய்ப்பை இழந்த அயர்லாந்து குடியரசு

பாரிஸ்: அயர்லாந்துக் குடியரசின் கியரன் கிளார்க் தமது அணிக்கு எதிராக சொந்த கோல் போட்டதால் சுவீடனுடன் நேற்று மோதிய அந்த அணி வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகில் உள்ள ஸ்டேட் டி பாரிஸ் என்ற திடலில் நடை பெற்ற இந்த ஆட்டத்தின் 48ஆம் நிமிடத்தில் வெஸ் ஹூலாஹன் சுவீடனுக்கு எதிராக கோல் போட்டு தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆனால் அதற்குப் பின் சுதாரித்துக் கொண்ட சுவீடன் அணி அயர்லாந்து குடியரசுக்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கியது. இதனால், தற்காப்பு ஆட்டக்காரரான கியரன் கிளார்க் சுவீடன் அணியின் தலைவரும் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக் காரருமான ஸ்லாட்டான் இப்ராகிமோவிச் அயர்லாந்து கோல் வலையை நோக்கி பந்தை உதைக்க அதைத் தடுக்க எண்ணிய கியரன் கிளார்க் இறுதி யில் அந்தப் பந்தை சொந்த வலைக்குள் புகுத்திய சோகம் நிகழ்ந்தது.

சுவீடனுக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் தான் போட்ட கோலால் ஏற்பட்ட மகிழ்ச்சிக் களிப்பில் அயர்லாந்து குடியரசின் வெஸ் ஹூலாஹன் (முதல் படம்). கீழ்ப்படத்தில், ஆட்டத்தின் 71ஆம் நிமிடத்தில் சுவீடன் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச் அதுவரை தமது அணிக்காக எதுவும் செய்யவில்லை என்ற குறையைப் போக்கும்விதமாக கொடுத்த நெருக்கடியில் அயர்லாந்து குடியரசின் தற்காப்பு வீரர் கிளார்க் தமது சொந்த வலைக்குள் பந்தை செலுத்தி சுவீடனுக்கு ஒரு கோல் பெற்றுத் தந்தார். கீழ்க்கோடி படத்தில் விறுவிறுப்பான நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து வீரர்களும் சுவீடன் விளையாட்டாளர்களும் மோதிக் கொண்டதன் அடையாளமாக அயர்லாந்தின் ரோபி கீனும் (பச்சை சீருடையில்) சுவீடனின் செபஸ்டியன் லார்சனும். படங்கள்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!