கட்டுக்கோப்பாக விளையாடி இத்தாலி அணி வெற்றி

லியோன்: நேற்று அதிகாலை பிரான்சின் லியோன் நகரில் பெல்ஜிய அணியை யூரோ கிண்ண காற்பந்துப் போட்டியில் எதிர் கொண்ட இத்தாலிய அணி கட்டுக்கோப்பான விளையாட்டால் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது. இந்த அணியை எதிர்த்துக் களம் கண்ட பெல்ஜிய அணியில் ஈடன் ஹசார்ட், ரொமேலு லுக்காக்கு, கெவின் டி பிரய்ன, போன்ற புகழ்பெற்ற நட்சத்திரப் பட்டாளம் இருந்தபோதிலும் அவர்களால் ஒரு குழுவாக இணைந்து விளையாட முடியவில்லை. யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்கு முன்னர் இத்தாலிய அணி பற்றி யாருமே பெருமையாகப் பேசவில்லை.

இந்த அணியின் நிர்வாகியான அண்டோனியோ கோம்டேகூட, "எங்கள் நாட்டுக் காற்பந்துக்கு இது சரியான நேரமில்லை," என்று கருத்துரைத்திருந்தார். ஆனால், அவர் கூடவே, "விளையாட்டாளர் களிடையே சரியான குழு உணர்வு இருக்க வேண்டும். இதற்காக நான் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன்," என்று கூறி னார். நேற்றைய ஆட்டத்தை வைத் துப் பார்க்கும்போது அவர் இதை நன்றாகவே சாதித்துள்ளார் என்று தெரிவதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. ஆட்டத்தின் 32ஆம் நிமிடத்தில் லியோனார்டோ பொனுச்சி கொடுத்த பந்தை இமேனுவல் கியக்கேரினி லாவகமாக பெல்ஜிய கோல் வலைக்குள் செலுத்தினார்.

இத்தாலி வீரர் இமேனுவல் கியக்கேரினி (இடக்கோடி, எண் 23 சீருடையில்) பெல்ஜியத்துக்கு எதிரான முதல் கோலை போடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!