இந்தியாவிடம் மீண்டும் மோசமாகத் தோற்ற ஸிம்பாப்வே

­­­ஹ­ராரே: இந்தியா=ஸிம்பாப்வே அணிகள் இடை­யி­லான கடைசி ஒருநாள் போட்­டியைக் 3=0 என இந்தியா கைப்­பற்­றி­யது. பூவா தலையா வென்று முதலில் பந்த­டிக்­கத் தொடங்­கிய ஸிம்பாப்வே 42.2 ஓவர்­களில் அனைத்து விக்­கெட்­டு­களை­யும் இழந்து 123 ஓட்­டங்கள் மட்டுமே எடுத்­தது. அந்த அணியில் சிபந்தா(38), சிபபா(27) ஓட்­டங்கள் எடுத்த னர். இந்திய அணி தரப்­பில் பும்ரா 22 ஓட்­டங்கள் மட்டுமே விட்­டுக்­கொ­டுத்து 4 விக்­கெட்டு களைச் சாய்த்­தார். இதை­ய­டுத்து 124 ஓட்­டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளை­யா­டி­யது. சாகல், அறிமுக வீரர் பஸல் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னர். முத லில் நிதா­ன­மாக விளையாடிய இந்த ஜோடி 10 ஓவர்­களில் 43 ஓட்­டங்கள் எடுத்­தது.

தொடர்ந்து நிதா­ன­மாக ஆடிய இரு­வ­ரும் அரை­ச­தம் அடித்­த­னர். இறு­தி­யில் இந்திய அணி விக்கெட் இழப்­பின்றி 21.5 ஓவர்­களில் வெற்றி இலக்கை எட்­டி­யது. சராசரி ஓட்ட விகிதத்தின்படி ஸிம்பாப்வேயின் இரண்டாவது மோசமான ஆட்டமாக இது அமைந்தது. இந்த வெற்­றி­யின் மூலம் 3 போட்­டி­கள் கொண்ட தொடரை இந்திய அணி முழு­வ­து­மாக கைப்­பற்­றி­யுள்­ளது. 63 ஓட்­டங்கள் எடுத்த ராகுல் ஆட்­ட­நா­ய­கனாக தேர்வு செய்­யப்­பட்­டார். இந்தத் தொடரில் ஒரு சதம், ஒரு அரை­ச­தம் உட்பட ராகுல் 196 ஓட்­டங்கள் குவித்த ராகுல் தொடர் நாயகன் விருதும் பெற்றார். இந்தத் தொடரில் பும்ரா அதி­க­பட்­ச­மாக 9 விக்­கெட்­டுக்­களைச் சாய்த்­துள்­ளார். தனது அறிமுக போட்­டி­யில் பாஸல் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 55 ஓட்­டங்கள் எடுத்து அசத்­தி­யுள்­ளார். இந்த வெற்­றி­யின் மூலம் ஆலன் ­பார்­டர் சாதனையைத் டோனி சமன் செய்­துள்­ளார். இதுவரை 107 ஒருநாள் போட்­டி­களில் டோனி வெற்­றியைத் தந்­துள்­ளார்.

ராகுல் 2 சிக்சர் 4 பவுண்ட­ரி­களு­டன் 63 ஓட்­டங்களும் பஸல் 55 ஓட்­டங்களும் எடுத்து ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்த­னர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!