ஹங்கேரியிடம் வீழ்ந்த ஆஸ்திரியா

போர்டெக்ஸ்: யூரோ கிண்ணக் காற்பந்தின் 'எஃப்' பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரி=ஆஸ்திரியா அணிகள் மோதின. முற்பாதி ஆட்டம் பரபரப்பாக இல்லையென்றாலும் இரு அணி களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். ஆனால், ஹங்கேரி வீரர் ஆடம் சாலாய் 62வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். சகவீரர் லென்ஹஸ்லர் கடத்திக் கொடுத்த பந்தை அவர் கோலாக மாற்றினார். அதேசமயம் அடுத்த நான்கு நிமிடங்களில் ஹங்கேரி வீரர் டிராகோவிச் தப்பாட்டம் காரணமாக வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஆஸ்திரியா வுக்கு ஏற்பட்டது. இது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. 87வது நிமிடத்தில் ஹங்கேரி 2வது கோலை போட்டது. மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்டைபெர் அந்தக் கோலை அடித்தார். ஆட்டம் முடிவில் ஹங்கேரி 2=0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு, முக்கிய, பெரிய காற்பந்து தொடரில் விளையாடுவது ஹங்கேரிக்கு இதுவே முதல்முறை யாகும். மேலும் ஹங்கேரியின் கோல் காப்பாளர் 40 வயது கபோர் கிரேலி யூரோ காற்பந்து தொடரில் விளையாடும் மூத்த ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். மற்றோர் ஆட்டத்தில் போர்ச்சு கல்=ஐஸ்லாந்து அணிகள் மோதின. 31வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நானி கோல் அடித்தார்.

தொடர்ந்து 2வது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகலை ஐஸ்லாந்து வீரர்கள் சாதுரியமாக தடுத்தார். அதுமட்டுமல்லாமல், 50வது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் பிஜார் நெசன் பதில் கோல் அடித்துப் போர்ச்சுகல்லுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. போர்ச்சுகல் அணியை வீழ்த் தியதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர் ஐஸ்லாந்து வீரர் கள். அதைக்கண்ட போர்ச்சுகலின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ, "இவர்கள் யூரோ கிண்ணத்தை வென்று விட்டார் களோ என்று எண்ணத் தோன்று கிறது," என்று கிண்டலாகக் கூறினார்.

ஹங்கேரி அணிக்கான முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் அதன் வீரர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!