யூரோ கிண்ணக் காற்­பந்து தொடரில்ரா பிரான்ஸ் வெற்றி

யூரோ கிண்ணக் காற்­பந்து தொடரில் நேற்று அதிகாலை நடந்த ஆட்­ட­மொன்­றில் போடப்­பட்ட கடைசி நிமிட கோலால் அல்­பே­னி­யாவை வீழ்த்­தி­யது பிரான்ஸ். இதனால் காலி­று­திக்கு முந்தைய சுற்றான 'நாக்­அ­வுட்' சுற்­றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. இரு அணி­களுமே அவ்­வ­போது கிடைத்த கோல் போடும் வாய்ப்பைத் தவ­ற­விட்­ட­னர். பிற்பாதி ஆட்­டத்­தின்­போது அல்­பே­னிய வீரர் அடித்த பந்து எதி­ர­ணி­யின் வலைக்­குள் செல்­லா­மல் கோல் கம்பத்தை உரசி சென்றது. அதேபோல், பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிர­வுட்­டும் பந்து நேராக வலைக்­குள் செல்லும் வாய்ப்பை மூன்று முறை தவ­ற­விட்­டார். ஆட்டம் முழு­வ­தும் கோல் எதுவும் அடிக்­கப்­ப­டாத நிலையில், அல்­பே­னி­யா­வின் தடுப்­பாட்­டத்­திற்கு 90வது நிமி­டத்­தில் முற்­றுப்­புள்ளி வைத்தது பிரான்ஸ்.

அப்போது அடில் ரமி கடத்­திக் கொடுத்த பந்தை, மாற்று ஆட்­டக்­கா­ரர் கிரிஸ்­மேன் தலையால் முட்டி கோலாக்­கினார். அதனைத்­தொ­டர்ந்து காயம் பட்­ட­தற்­கான கூடுதல் நேரத்­தின்­போது, பிரான்­சின் கோலை சமன் செய்ய முனைப்­பு­டன் விளை­யா­டி­யது அல்­பே­னியா. ஆனால், ஆண்டரி தந்த பந்தை 92வது நிமிடத்தில் கோலாக்கி பிரான்­சின் வெற்றியை உறுதி செய்தார் பாயெட். எனவே, 2-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவு பட்டி யலில் முதல் இடத்தில் உள்ளது பிரான்ஸ். முதல் ஆட்­டத்­தில், ரூமே­னி­யாவை 2-1 என்ற கோல் கணக்­கில் பிரான்ஸ் வீழ்த்­திய போதும் வெற்­றிக்­கான கடைசி கோலை பாயெட்­தான் போட்டார். அடுத்த ஆட்டத்தில் சுவிட்­சர்­லாந்தை எதிர்­கொள்­வதற்கு முன்னரே பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஏற்கெனவே சுவிட்சர்லாந்திடமும் தோல்வியைத் தழுவிய அல்பேனியா, வரும் ஞாயிறன்று ரூமேனியாவை எதிர்கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!