உக்ரேனை வீழ்த்தி யூரோ காற்பந்தில் முதல் வெற்றியை ருசித்தது வடஅயர்லாந்து

லியோன்: யூரோ கிண்ண காற்பந்து தொடரில் முதன்முதலாக ஒரு வெற்றியைப் பதிவு செய்து சாதித் துள்ளது வடஅயர்லாந்து. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் உக்ரேனை 2=0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது அக்குழு. கேரத் மெக்காலி 49வது நிமி டத்திலும் நியால் மெக்கின் ஆட் டத்தின் இறுதி நிமிடத்திலும் அந்த கோல்களை அடித்தனர். 1982ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில் அதை ஏற்று நடத்திய ஸ்பெயினை வீழ்த்திய பிறகு ஐரோப்பிய காற் பந்துத் தொடர் ஒன்றில் வட அயர்லாந்து பெற்ற முதல் வெற்றி யும் இதுதான்.

"தேறாத அணி என்று நினைத்து எங்களை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்த வெற்றி மிகச் சிறந்த தருணம்," என்றார் மெக்காலி. போலந்துக்கு எதிரான ஆட்டத் தில் தங்களது ஆட்டத்திறன் எடு படாமல் போன நிலையில் உக்ரேன் உடனான ஆட்டத்தில் அதைச் சரியாக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்ததாகவும் அவர் சொன் னார். அத்துடன், யூரோ கிண்ணப் போட்டியில் கோலடித்த அதிக வயதான வீரர்கள் வரிசையில் இரண்டாவதாகத் தமது பெயரை இடம்பெறச் செய்தார் 36 வயது மெக்காலி.

ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் கேரத் மெக்காலி கோலடித்து தமது அணியின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்ததைக் கொண்டாடும் வடஅயர்லாந்து வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!