யூரோ கிண்ணக் காற்பந்து: நெருப்பை கொளுத்திப்போட்டு ரகளை

யூரோ கிண்ணக் காற்பந்து தொடரில் நடந்த செக் குடியரசு, குரோவே‌ஷியா இடையிலான ஆட்டத்தின்போது மைதானத்திற் குள் நெருப்பை வீசி எறிந்த ரசிகர்களை 'விளையாட்டு தீவிர வாதிகள்' என்று குறிப்பிட்டுள்ளார் குரோவே‌ஷியா நிர்வாகி கேகிச். 2=2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்த இந்த ஆட்டம் 82வது நிமிடத்தில் ஐந்து நிமிடம் நிறுத்தப்பட்டது. அதுவரை 2=1 என குரோவே ‌ஷியா முன்னிலையில் இருந்தது. ரசிகர்களின் ரகளை அடங்கிய பின், ஆட்டம் மீண்டும் தொடங் கிய போது, செக் குடியரசு அடித்த மற்றோர் கோலால் ஆட்டம் சமனில் முடிந்தது. ரசிகர்கள் ரகளையில் ஈடு பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஐரோப்பிய காற்பந்துக் கழகம் கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய குரோவே ‌ஷிய நிர்வாகி கேகிச், "உண்மை யிலேயே அவர்கள் குரோவே‌ஷிய ரசிகர்கள் அல்ல. அவர்களை நான் கலகக்காரர்கள் என்று அழைப்பேன்," என்றார். முன்னதாக, துருக்கிக்கு எதிரான ஆட்டத்தின்போதும் ரக ளையில் ஈடுபட்டதாக குரோவே ‌ஷிய ரசிகர்கள் குற்றம்சாட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் குரோவே‌ஷியா காற் பந்து சங்கமும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்த அவர், 95% குரோவே‌ஷிய ரசிகர் கள் ஐரோப்பாவுக்கு முன்பாக தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டார்கள் என்றும் கூறினார். ஸ்பெயின்- துருக்கி இடையி லான மற்றோர் ஆட்டத்தின்போதும் நெருப்பைக் கொளுத்திய துருக்கி ரசிகர்கள் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்திற்கு முன்ன தாக, மைதானத்திற்குள் தீச்சுடரை எடுத்துவர முயன்ற மூன்று ஸ்பானியர்கள் கைது செய்யப் பட்டனர்.

மைதானத்திற்குள் நெருப்பை கொளுத்திப்போட்டு ரகளையில் ஈடுபட்ட தனது ரசிகர்களிடம் குரோஷிய வீரர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!