வாய்ப்பை எதிர்பார்த்துள்ள இரு வல்லவர்கள்

லியோன்: வேல்ஸ் அணிக்கெதி ரான ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மாற்று ஆட்டக்காரர் களாகக் களமிறங்கியபோதும் ஆளுக்கு ஒரு கோலடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர் இங்கி லாந்து ஆட்டக்காரர்களான ஜேமி வார்டியும் டேனியல் ஸ்டரிஜும். இதையடுத்து, நாளை அதி காலை நடக்கவுள்ள ஸ்லோவாக் கியாவிற்கு எதிரான ஆட்டத்தில் அவ்விருவரையும் தொடக்கத்தி லேயே களமிறக்கலாமா என்று யோசித்து வருகிறார் இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் ராய் ஹாட்சன்.

போதாதற்கு, சமநிலையில் முடிந்த ரஷ்யாவிற்கு எதிரான ஆட்டத்திலும் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பாதியிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஹேரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோருக்குப் பதிலாக வார்டியையும் ஸ்டரிஜ் ஜையும் களமிறக்க வேண்டும் என்று ஆதரவுக் குரல் கொடுத்தி ருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஆலன் ‌ஷியரர். கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் அதிக கோல் களைப் புகுத்தியவரான கேன் நடப்பு யூரோ தொடரில் கோல் அடிக்கத் தடுமாறி வருகிறார். மாறாக, வேல்ஸ் உடனான ஆட்டத்தில் தான் களம் புகுந்த 11வது நிமிடத்திலேயே பந்தை வலைக்குள் தள்ளி சாதித்த வார்டி, “அடுத்த ஆட்டத்தில் தொடக்கத் திலேயே களமிறங்கினால் மகிழ்ச்சி தான்,” என்றார். இருப்பினும், இங்கிலாந்து அணி தற்காப்பை வலுப்படுத்து வதோடு அதன் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட்டும் தனது செயல் பாட்டை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி