அரிய வாய்ப்பை நழுவவிட்ட ஐஸ்லாந்து

மார்சே: யூரோ கிண்ணக் காற்பந் தில் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள ஐஸ்லாந்து அணி அத்தொடரில் தனது முதல் வெற் றியைப் பதிவு செய்யக் கிடைத்த அருமையான வாய்ப்பை நழுவ விட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த ஹங்கேரிக்கு எதிரான ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் பெனால்டியின் மூலம் கில்ஃபி சிகர்ட்சன் போட்ட கோலால் முன்னிலைக்குச் சென்றது ஐஸ் லாந்து. கிட்டத்தட்ட ஆட்டத்தின் இறுதி வரை அதே நிலை நீடித்த போதும் 88வது நிமிடத்தில் சொந்த கோல் போட்டு அவ்வணி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது.

சொந்த கோல் போட்டு தமது அணியின் வெற்றி வாய்ப்பை நொறுங்கச் செய்த சோகத்தில் ஐஸ்லாந்து ஆட்டக்காரர் பிர்கிர் சவர்சன் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு