ரூனி: யுனைடெட்டுடன் ஓய்வு

மான்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி தனது காற்பந்து வாழ்க்கையின் இறுதிக் கட்டம் வரை யுனைடெட்டில் கழிக்க விரும்புகிறார். கோல் போடும் முன்னணி வீரராக இருந்து தற்போது மத்தியத் திடல் வீரராக யுனைடெட்டுக்கும் இங்கிலாந்துக்கும் விளையாடும் ரூனிக்கு வயது 30. இன்னும் மூன்று காற்பந்து பருவங்கள் யுனைடெட்டில் இருக்க ஒப்பந்தம் உள்ள போதிலும் தான் காற்பந்திலிருந்து ஓய்வு பெறும் வரை யுனைடெட்டிலேயே தமது காற்பந்து வாழ்க்கையைக் கழிக்க விரும்புவதாக ரூனி கூறியுள்ளார்.

இளம் வயது முதல் கோல் மன்னனாகத் திகழ்ந்த ரூனி சற்று வேகம் குறைந்த மத்திய திடலில் விளையாடுவதற்காக தமது பாணியை மாற்றிக்கொள்ள நேரிட்டது. அதற்காக இங்கிலாந்தின் முன்னாள் மத்திய திடல் நட்சத்திரங்களான ஸ்டீவன் ஜெரார்ட், பால் ஸ்கோல்ஸ் ஆகியோரின் பாணியைப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கற்கத் தொடங்கியதாகக் கூறினார். அதற்குப் பலனும் கிடைக்கும் வண்ணம் ரூனி மத்திய திடலிலும் வெளுத்துக் கட்டுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!