மன்னிப்புக் கோரிய ஸ்பெயின் வீரர்

பாரிஸ்: யூரோ தொடரில் விளையாடி வரும் ஸ்பெயின் காற்பந்துக் குழுவில் இடம்பெற்றிருந்தும் போட்டிகளில் ஆட போதிய வாய்ப்புக் கிட்டாததால் தாம் பிரான்சுக்கு வந்திருக்கவே கூடாது என்ற வகையில் பேசியிருந்தார் பெட்ரோ ரோட்ரிகுவெஸ் (படம்). அந்த அணி பங்கேற்ற முதல் இரு போட்டிகளில் பெட்ரோ பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே களத்தில் இருந்தார். இந்த நிலையில், தமது கருத்து புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தமது அணி வாகை சூடத் தம்மாலான வகையில் உதவுவேன் என்றும் தெரிவித்துள்ளார் பெட்ரோ.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா