வேல்ஸ் விறுவிறு ஆட்டம்

டூலூஸ்: இங்கிலாந்து அணியுட னான இரண்டாவது ஆட்டத்தில் முன்னிலை பெற்றும் பின் தோல் வியைத் தழுவிய வேல்ஸ் அணி, தனது இறுதி பிரிவுச் சுற்று ஆட் டத்தில் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. முதல் ஆட்டத்தில் ஸ்லோவாக் கியாவை வீழ்த்தியிருந்ததால் இவ் வெற்றியுடன் சேர்த்து மொத்தம் ஆறு புள்ளிகளைப் பெற்ற வேல்ஸ் 'பி' பிரிவுப் பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முந்திய சுற்றில் அடியெடுத்து வைத்தது.

முக்கிய காற்பந்துத் தொடர் களில் 'நாக் அவுட்' சுற்றுக்கு அவ்வணி முன்னேறியிருப்பது இது இரண்டாவது முறை. வேல்ஸ் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் கோல்மன், ஹல்-ராப்சன் கானுவிற்குப் பதிலாக தாக்குதல் ஆட்டக்காரர் சேம் வோக்சைத் தேர்வு செய்தது பலரது புருவங் களை உயர்த்தச் செய்தது. ஆனால், வோக்ஸ் வேல்சின் தாக்குதல் பகுதியில் அச்சாணி போல் திகழ்ந்தது கோல்மனின் முடிவு சரியான ஒன்றுதான் என நிரூபிக்கும் வகையில் இருந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தி லேயே வேல்சின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார் ஆர்சனல் குழு வீரரான ஏரன் ராம்சி. அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில் அந்த முன்னிலையை இரட்டிப்பாக்கினார் நீல் டெய்லர். அனைத்துலகப் போட்டிகளில் டெய்லர் அடித்த முதல் கோல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்பாதியிலும் வேல்சின் கோல் வேட்டை தொடர்ந்தது. 67வது நிமிடத்தில் அற்புதமான கோலை அடித்தார் நட்சத்திர ஆட்டக்காரர் கேரத் பேல். இந்தத் தொடரில் பேல் அடித்த மூன்றாவது கோல் இது. இதன்மூலம் நடப்பு யூரோ காற்பந்துத் தொடரில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முதலிடத்திற்குத் தாவினார் ரியால் மட்ரிட் வீரரான பேல்.

இங்கிலாந்து அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் கேரி கேஹிலிடம் (நடுவில்) பந்து செல்லாமல் தடுத்துத் தன்வசமாக்கிய ஸ்லோவாக்கியா கோல்காப்பாளர் மட்டுஸ் கொஸசிச் (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!