பிரேசில்: துப்பாக்கி முனையில் வீராங்கனையிடம் வழிப்பறி

ரியோ டி ஜெனிரோ: இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் அங்கு ஆஸ்திரேலிய விளையாட்டாளர் ஒருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது சைக்கிளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிறன்று சைக்கிளில் தாம் சென்றபோது வழியில் இடைமறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஆடவர், தம்மை சைக்கிளில் இருந்து தள்ளிவிட்டு தமது சைக்கிளைப் பறித்துச் சென்றதாகச் சொன்னார் ஆறு முறை பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவரான லீசல் டெஸ்ச்.
ஆஸ்திரேலிய பாராலிம்பிக் குழுவின் இயன் சிகிச்சையாளர் சாரா ரோசும் இந்தத் தாக்குதலில் தமது சைக்கிளை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரியோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண் டும் என்று ஆஸி. ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’