ஹராரே: இறுதிப் பந்து வரை இழுபறி

ஹராரே: கடைசிப் பந்து வரை நீடித்த மூன்றாவது டி20 போட்டியில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஓட்டங்களில் வென்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஸிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என எளிதாக வென்றது. அதையடுத்து இடம்பெற்ற டி20 தொடரின் முதல் ஆட்டத் தில் ஸிம்பாப்வே இரண்டு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற, 2வது போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது. இதையடுத்து, தொடரை தீர்மானிக்கும் 3வது ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

முதலில் பந்தடித்த இந்தியா எதிரணி வீரர்களின் பந்துகளில் ஓட்டங்களைச் சேர்க்கத் திணறி யது. கேதார் ஜாதவ் தாக்குப் பிடித்து ஆடி 58 ஓட்டங்களைச் சேர்க்க, இந்தியா 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து ஆடிய ஸிம்பாப்வே அணிக்கு முன்வரிசை வீரர்கள் உரிய பங்களிப்பை அளித்தனர். இருப்பினும் இந்திய அணியினர் சுதாரித்து ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினர். இறுதி ஓவரில் 21 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸிம்பாப்வே அணி 17 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக ஜாதவும் தொடர் நாயகனாக பரிந்தர் ஸ்ரனும் தேர்வு பெற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!