அதிசயிக்க வைத்த ஐஸ்லாந்து

செயின்ட் டெனிஸ்: யூரோ காற் பந்துத் தொடரில் பங்குபெறும் அணிகளிலேயே மிகச் சிறிய நாடு என்றபோதும் மற்ற அணிகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கும்படியாக வெற்றி நடை போட்டு வருகிறது ஐஸ் லாந்து. முதன்முறையாக யூரோ போட்டிகளில் பங்கேற்ற ஐஸ்லாந்து நேற்று அதிகாலை தனது முதல் வெற்றியையும் ருசித்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஆர்னர் இங்வி ட்ராஸ்டசன் அடித்த கோலால் 2=1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்திய அக்குழு ‘எஃப்’ பிரிவில் ஐந்து புள்ளி களுடன் இரண்டாமிடம் பிடித்து ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.

வரும் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடக்கவுள்ள கால் இறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத் தில் தன்னைவிட அளவில் 165 மடங்கு பெரிய இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது சுமார் 330,000 பேர் மட்டுமே வாழும் குட்டி நாடான ஐஸ்லாந்து. “இந்த வெற்றியை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் செய்திருப்பது மிக அற்புதமான சாதனை. ஆட்டத்தை நேரில் காண ஐஸ்லாந்தில் இருந்து சுமார் 10,000 பேர் வந்திருந்ததையும் எங்களால் நம்பவே முடியவில்லை. அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேரை நான் அறிவேன் அல்லது குறைந்தபட்சம் அடையாளமாவது காண முடியும். இது, பாலில் தேன் கலந்ததுபோல இனிமையிலும் இனிமை,” என்றார் ஐஸ்லாந்து தற்காப்பு ஆட்டக்காரர் காரி அர்னசன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு