‘வீரர்களின் மூத்த சகோதரன்’

பெங்களூரு: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி யின் மிகச் சிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்ந்த அனில் கும்ளே, 45, இப்போது அவ்வணியின் புதிய பயிற்றுவிப்பாளர். டெஸ்ட் போட்டிகளில் 619 விக் கெட்டுகளையும் ஒருநாள் ஆட்டங் களில் 337 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ள கும்ளே இதுவரை எந்த அணிக்கும் பயிற்சி அளித் தது இல்லை. ஆயினும், இவரது அனுபவமும் அமைதியான குணமும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் நேர்காணலின்போது இந்திய அணியை வலுப்படுத்த முன் வைத்த யோசனைகளும் உத்திகளுமே ரவி சாஸ்திரியை ஓரங் கட்டி இவருக்குப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பைப் பெற்றுத் தந்ததாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த ஓராண்டு காலத்திற்கு இந்திய அணிக்குப் பயிற்சியளித்து வழிநடத்தவிருக்கிறார் இவர். நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறது விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. அது முதல் கும்ளேவின் பணி தொடங்குகிறது. தலைமைப் பயிற்றுவிப்பாளராக அணியின் ஓய்வறைக்குத் திரும்ப இருப்பது குறித்துக் கருத்துரைத்த இவர், "இது மிகப் பெரிய கௌரவம், மிகப் பெரிய சவால், மிகப் பெரிய பொறுப்பு.

ஏராளமான எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்திய அணிக்கு மீண்டும் பங்களிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்திய அணியால் பெற்றதைத் திருப்பித் தர இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன்," என்றார். "எப்போதும் அணிக்குத்தான் முதலிடம் என்பதைத் திடமாக நம்புபவன் நான். எத்தகைய கடின மான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தனது திறனுக்கேற்ப அணி முழுமையாகத் தயாராகி உள்ளதா என்பதை உறுதி செய்வதே பயிற்று விப்பாளரின் பணி," என்று கும்ளே சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!