டுலூஸ்: திறமைமிக்க நட்சத்திரப் பட்டியலைக் கொண்டிருக்கும் பெல்ஜியம் நாளை அதிகாலை நடைபெறும் 'நாக் அவுட்' ஆட்டத்தில் ஹங்கேரிக்கு எதிராக மெத்தனத்துடன் விளையாடினால் அதற்கு ஆபத்து திண்ணம். குழு உணர்வோடு கட்டுக் கோப்புடன் விளையாடும் ஹங்கேரி யாரும் எதிர்பாராத வகையில் 'எஃப்' பிரிவின் முதல் நிலையைப் பிடித்து 'நாக் அவுட்' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் இத்தாலி யிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்ற மளித்த பெல்ஜியம், சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த ஆட்டங் களைக் கைப்பற்றியது. முதல் சுற்று ஆட்டங்களில் கோல் போட கிடைத்த பல வாய்ப்பு களை வீணடித்த பெல்ஜியம் இந்த முறையும் அதைத் தொடர்ந்தால் வெற்றிக்குப் பசியோடு காத் திருக்கும் ஹங்கேரியால் தண்டிக் கப்படும் சாத்தியம் அதிகம் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் குழு காலிறுதியில் வேல்ஸ் அல்லது வடஅயர்லாந்தைச் சந்திக்கும்.