கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்

பார்படோஸ்: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீசும் தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் ஏற்று நடத்தும் இந்தப் போட்டியில் அதனுடன் சேர்ந்து ஆஸ்திரேலி யாவும் தென்னாப்பிரிக்காவும் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்=தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் 49.5 ஓவர்களில் 285 ஓட்டங்கள் குவித்தது. டாரன் பிராவோ 102 ஓட்டங்களும் போல்லார்ட் 62 ஓட்டங்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் ரபடா, மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து பந்தடித்த தென்னாப்பிரிக்கா 46 ஓவர்களில் 185 ஓட்டங்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பெகருதீன் அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார். சுனில் நரீன், கேப்ரியல் தலா 3 விக்கெட்டுகளும் பிராத் வெயிட் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா= வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’