கோப்பா அமெரிக்கா: 3ஆம் இடத்தை வென்ற கொலம்பியா

கோப்பா அமெரிக்கா காற்பந்துக் கிண்ணப் போட்டியின் மூன்றாம், நான்காம் இடங்களுக்கான ஆட்டத்தில் யுஎஸ்ஏ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது கொலம்பியா. இரு அணிகளுமே ஆட்டத்தில் முனைப்புடன் தாக்குதல்களில் கவனம் செலுத்தின. இத்தாலியின் ஏ சி மிலான் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரரான கார்லோஸ் பக்கா ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் முதல் கோலை வலைக்குள் புகுத்தினார்.

அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவிடம் 4-0 என்ற கோல் கணக்கில் தோற்ற யுஎஸ்ஏ ஏற்கெனவே இப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கொலம்பியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும் பிறகும் மனம் தளரவில்லை யுஎஸ்ஏ. எப்படியாவது கோல் போடவேண்டும் என்று பலமுறை முயற்சித்தும் கொலம்பியாவின் கோல்காப்பாளர் ஒஸ்பினா யுஎஸ்ஏவுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இறுதியில் பக்கா அடித்த ஒரே கோல் கொலம்பியாவின் வெற்றிக் கோலாகவும் அமைந்தது.

குரோஷியாவுடனான ஆட்டத்தில் கோல் வலை நோக்கி ரொனால்டோ (வலது) உதைத்த பந்தை குரோஷிய கோல்காப்பாளர் தடுத்தும் அது நேராக போர்ச்சுகலின் கரீஸ்மாவிடம் செல்ல அதைக் கோலாக்கி தமது அணிக்கு வெற்றியை அவர் தேடித்தந்தார். படம்: ராய்ட்டர்ஸ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!