கால் இறுதியில் போர்ச்சுகல்

தகுதிச் சுற்றில் ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறாமல் மூன்று ஆட்டங் களிலும் சமநிலை கண்டபோதும் யூரோ 2016ன் புதிய விதி முறைகளின் பலனால் போர்ச்சுகல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. அதிர்ஷ்டத் தேவதையின் பார்வை தொடர்ந்து போர்ச்சுகலின் மீதுதான் உள்ளது போலும். அது நேற்று பின்னிரவு நடந்த ஆட்டத்தில் குரோஷியாவை 1-0- என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

தகுதிச் சுற்றில் நடப்பு யூரோ வெற்றியாளரான ஸ்பெயினை வீழ்த்தியது மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குரோஷியா. போர்ச்சுகலில் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ இடம் பெற்றுள்ளதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும். ஆனால் ஆட்டம் முழுவதும் இரு குழுக்களுமே முனைப்பு காட்டவில்லை. ஆட்டத்தில் சூடும் இல்லை. சொல்லப்போனால் எவருமே கோல் வலைக்கு அருகில் கூடப் பந்தை உதைக்கவில்லை.

முழு நேர 90 நிமிட ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் முடிய ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. அப்போதும் எந்த குழுவுமே வெற்றி பெறத் தகுதி உடைய அணி போல தெரிய வில்லை. ஆட்டம் பெனால்டி வாய்ப்புகளுக்குச் செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஆட்டத்தின் 117வது நிமிடத்தில் போர்ச்சுகலின் ரொனால்டோ பந்தை கோல் வலை நோக்கி உதைத்தார். அதை குரோஷியாவின் கோல்காப்பாளர் தடுத்தும் அது நேராக போர்ச் சுகலின் கரீஸ்மாவை நோக்கிச் செல்ல அவர் காலியான வலைக்குள் அதைத் தலையால் முட்டி கோலாக்கினார். அதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாகவும் அமைந்தது.

அடுத்துப் போர்ச்சுகல் கால் இறுதிச் சுற்றில் வரும் வியாழக்கிழமை போலந்தைச் சந்திக்கும். பெனால்டி வாய்ப்புகள் மூலம் போலந்து வெற்றி போலந்து சுவிட்சர்லாந்து அணியைப் பெனால்டி வாய்ப்புகளில் முன்னதாக 5--4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தகுதிச் சுற்றுக்குப் பிந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் போலந்தும் சுவிட்சர்லாந்தும் பொருதின. முழு நேர ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிய கூடுதல் ஆட்டத்தில் எவ்வணியும் கோல் போடவில்லை. சொந்த கோலால் மண்ணைக் கவ்விய வட அயர்லாந்து நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ் அணியும் வட அயர்லாந்தும் பொருதின. வட அயர்லாந்து தனது தற்காப்பினால் வேல்ஸ் தாக்குதல் களை முறியடிக்கப் பார்த்தது. வேல்ஸ் அணியினரால் அதன் தற்காப்புக் கோட்டையைத் தகர்க்க முடியாமல் திண்டாடியது. வட அயர்லாந்துதான் அவ்வப்போது எதிர்த்தாக்குதல்கள் மூலம் வேல்ஸ் கோல் எல்லையைக் கடந்தது. ஆனால் கோல் போட முடியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!