வாகை சூடியது ஆஸ்திரேலியா

பார்பேடோஸ்: வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்று நாடுகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் அந்த அணி 58 ஓட்ட வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. மூன்றாவது அணியாக இந்தத் தொடரில் பங்கேற்ற தென்னாப் பிரிக்கா ஒரே ஒரு புள்ளி வித்தி யாசத்தில் இறுதிச் சுற்றுக்கு முன் னேறும் வாய்ப்பை இழந்தது.

ஒவ்வோர் அணியும் மற்ற இரு அணிகளுடன் மூன்று முறை மோதின. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளி களைப் பெற்று முதலிடம் பிடித்தது. வெஸ்ட் இண்டீஸ் 13 புள்ளிகளும் தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளும் பெற்றிருந்தன. இதையடுத்து, சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா=வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஆஸி. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலில் தமது அணி பந்த டிக்கும் என அறிவித்தார். தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, ஆரோன் ஃபிஞ்ச் ஆகி யோர் களமிறங்கினர்.

கவாஜா 14 ஓட்டங்களில் வெளியேறியபோதும் அடுத்து வந்த ஸ்மித்துடன் இணைந்து ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டார் ஃபிஞ்ச். அவர் 47 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைவிட ஓர் ஓட்டம் குறைவாக எடுத்து வெளியேறினார் ஸ்மித். பின் வந்தவர்களில் ஜார்ஜ் பெய்லி (22), மிச்செல் மார்ஷ் (32) ஆகிய இருவரும் சற்றுத் தாக்குப் பிடித்தபோதும் விக்கெட் காப்பாளர் மேத்யூ வேடின் ஆட்டம்தான் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்தது. ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட் சரிவு இருந்தபோதும் வேட் மட்டும் எதிரணியினரின் பந்தைத் திறம் படச் சமாளித்து ஓட்டம் குவித்தார். அவர் 52 பந்துகளில் 57 ஓட்டங் களை விளாசி இறுதிவரை களத் தில் நிற்க, ஆஸி. அணி 50 ஓவர் களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களை எடுத்தது.

வலிமையான எதிரணியை வீழ்த்தி சொந்த மண்ணில் கிண் ணம் வெல்லும் முனைப்புடன் அடுத்து பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்ல்ஸ் (45) தவிர மற்ற முன் வரிசை வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இல்லை. நடுவரிசையில் ராம்தின் (40), பொல்லார்ட் (20-), அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் (34) ஆகியோர் சற்று நிதானமாக ஆடியபோதும் அணியின் வெற்றிக்கு அது போது மானதாக இல்லை. தேவையான ஓட்ட விகிதம் அதிகமாக இருந்ததால் விரைவாக ஓட்டம் குவிக்க முயன்று விக்கெட் டுகளை இழந்தனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். இறுதியில் அந்த அணி 45.4 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் பறி கொடுத்து 212 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மார்ஷ் ஆட்ட நாயகனாகவும் ஹேசல்வுட் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.

57 ஓட்டங்களை விளாசி தமது அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவிய ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!