‘இங்கிலாந்தின் ஆக மோசமான செயல்பாடு’

நீஸ்: ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதை அடுத்து, அதன் ஆட்டக்காரர்கள் விளையாடிய விதத்தைப் பற்றி இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆலன் ‌ஷியரர் கடுமையாக விமர்சித் துள்ளார்.

"இங்கிலாந்து வீரர்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு மோச மான செயல்பாட்டை நான் இதுவரை கண்டதில்லை," என்று கூறிய ‌ஷியரர், ஐஸ்லாந்துக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் அவர்கள் திணறியதைச் சுட்டினார்.

இங்கிலாந்து அணி கையாண்ட உத்திகளும் சரியில்லை என்று ‌ஷியரர் அதிருப்தி தெரிவித்தார். அணியின் நிர்வாகி என்கிற முறையில் ரோய் ஹோட்சன் சரியான வியூகங்களை வகுக்க தவறிவிட்டதாகவும் அவர் குறை கூறினார். ஐஸ்லாந்திடம் எதிர்பாராத் தோல்வியை இங்கிலாந்து சந்தித் ததும் ஹோட்சன் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"இங்கிலிஷ் பிரிமியர் லீக்தான் உலகிலேயே மிகச் சிறந்த காற் பந்துப் போட்டி என்ற மாயை எங் கள் கண்களை மறைத்துள்ளது. அந்தப் போட்டி திறமைமிக்க இங்கிலிஷ் ஆட்டக்காரர்களை அடையாளம் காண உதவவில்லை. போட்டியை மேலும் விறுவிறுப்பான தாகவும் சுவாரசியமானதாகவும் அமைக்க வெளிநாட்டு ஆட்டக் காரர்களையும் நிர்வாகிகளையும் நாங்கள் முழுமையாக சார்ந்திருக்கிறோம்.

"இங்கிலாந்தின் காற்பந்துத் தரம் சிறப்பாக இருக்கிறது என்ற தவறான எண்ணம் எங்கள் நாட்டில் வேரூன்றி இருக்கிறது," என்று ‌ஷியரர் தமது மனவேதனை யைக் கொட்டித் தீர்த்தார். இந்நிலையில், இங்கிலாந்துக் குழுவின் அடுத்த நிர்வாகியாகப் பொறுப்பேற்க ‌ஷியரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

"ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டம்தான் இப்போட்டியிலேயே இங்கிலாந்துக்குக் கிடைத்த மிக எளிமையான ஆட்டம் என்று நான் எண்ணியிருந்தேன். "ஆனால் வெற்றி பெறவேண் டும் என்ற முனைப்பும் பசியும் இங்கிலாந்து அணியினரைவிட ஐஸ்லாந்து வீரர்களிடம்தான் அதிகமாக இருந்தன," என்று இங்கி லாந்தின் முன்னாள் மத்தியத்திடல் ஆட்டக்காரர் ஜர்மேன் ஜெனாஸ் கூறினார்.

இங்கிலாந்து அணி தனது திறமைக்கு ஏற்ப செயல்படவே இல்லை என்றும் அதற்கு எதிராக குவிந்து வரும் கண்டனக் குரல் கள் நியாயமானவைதான் என்றும் அதன் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட் தெரிவித்தார்.

(இடமிருந்து) ஆட்டம் முடிந்ததும் சோகமே உருவாகக் காட்சி அளிக்கும் இங்கிலாந்து வீரர்கள். தனது அபிமான குழுவின் எதிர்பாராத் தோல்வியை நேரில் கண்டு அதை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் சிறுவன். தோல்வியின் பிடியிலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்ற முடியாமல் போனதை அடுத்து நிர்வாகிப் பதவியிலிருந்து விலகிய ரோய் ஹோட்சன். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!