லெஸ்டரைப் பின்பற்ற விழையும் ஐஸ்லாந்து அணி

செயிண்ட் டெனிஸ்: ஐஸ்லாந்தின் கனவுப் பயணம் தொடர்கிறது. இப்பயணம் இறுதிவரை தொடர்ந்து கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசையும் ஐஸ்லாந்து வீரர்களிடம் இப்போது தோன்றியிருந்தால் அதில் ஆச்சரி யப்படுவதற்கு ஏதும் இல்லை. இந்த ஆண்டு நடந்து முடிந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜாம்பவான் குழுக்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி லெஸ்டர் சிட்டி பட்டத்தை வென்றது. லெஸ்டர் வென்றது சாத்திய மென்றால் ஐரோப்பிய கிண்ணத் தை நாங்களும் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையும் ஐஸ்லாந்து வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிறந்துள்ளது. முதல் சுற்றில் போர்ச்சுகல், ஹங்கேரி ஆகிய குழுக்களுடன் சமநிலை கண்ட ஐஸ்லாந்து, ஆஸ்திரியாவை 2=1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி 'நாக் அவுட்' சுற்றுக்குத் தகுதி பெற்றது.

'நாக் அவுட்' சுற்றில் இங்கிலாந்தை 2-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து அக்குழு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்சுடன் அது வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது. "பிரான்சுக்கு எதிரான ஆட்டத் தில் நாங்கள் எவ்வித நெருக்கு தலும் இல்லாமல் களமிறங்குவோம். எங்கள் திறமை அனைத்தையும் வெளிப்படுத்துவோம். எதிர் பார்க்கப்பட்டதைவிட சிறப்பாகச் செய்துவிட்டோம். இனி இந்த ஆட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்ற நிலை இல்லை. வெல்லவேண்டும் என்ற ஆசை உண்டு, ஆனால் நெருக்குதல் இல்லை. இது எங்களுக்குச் சாதகமான சூழல்," என்று ஐஸ்லாந்தின் பயிற்றுவிப்பாளர் ஹேய்மிர் ஹால்கிரிம்சன் தெரி வித்தார். இருப்பினும், பிரான்ஸ் எளிதில் விட்டுக்கொடுக்காது என்று அவர் தமது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'நாக் அவுட்' சுற்றில் சக்கை போடு போட்ட ரக்னார் சிகட்சன் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!