அரையிறுதி கனவில் வேல்ஸ், பெல்ஜியம்

போர்டோ: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியின் அரை யிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற வேல்சும் பெல்ஜியமும் இன்று பின்னிரவு மோதுகின்றன. நட்சத்திரப் பட்டியலுடன் ஜொலிக்கும் பெல்ஜியம் இன்றைய ஆட்டத்தைக் கைப்பற்றும் என்று பரவலாகப் பேசப்பட்டாலும் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடும் வேல்சை சாதாரணமாக உதறித் தள்ளிவிட முடியாது. காலிறுதி ஆட்டத்தில் ஹங் கேரியை 4-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தபோதிலும் வேல்சை சற்று பதற்றத்துடன்தான் பெல்ஜிய ஆட்டக்காரர்கள் பார்க்கின்றனர்.

போட்டியின் தகுதிச் சுற்றில் வேல்ஸ் தலைநகர் கார்டிஃப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் அதனிடம் பெல்ஜியம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்சைத் தோற்கடிக்க பெல்ஜியம் தவறியது. அந்த ஆட்டம் சம நிலையில் முடிந்தது. "நட்சத்திர பட்டாளத்துடன் இருக்கும் பெல்ஜியம் எப்படியும் வெல்லவேண்டும் என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது அவர்களுக்கு ஒருவித மனவுளைச்சலைத் தரக்கூடும். இதை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்," என்று வேல்சின் தற்காப்பு ஆட்டக்காரர் கிறிஸ் கன்டர் கூறினார். வேல்ஸ் வலிமைமிக்க குழு வாகும். கேரத் பேல் மட்டுமல்ல, திறமைமிக்க மற்ற வீரர்களும் அக்குழுவில் உள்ளனர்," என்று பெல்ஜியம் பயிற்றுவிப்பாளர் மார்க் வில்மோட்ஸ் தமது குழுவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இன்றிரவு நடைபெறும் ஆட்டத் தில் அனைவரது கண்களும் பெல்ஜியத்தின் ஈடன் ஹசார்ட் (இடது), வேல்சின் கேரத் பேல் (வலது) ஆகியோர் மீது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹங்கரிக்கு எதிரான ஆட்டத் தில் எதிரணி ஆட்டக்காரர்களைத் திறன்பட கடந்து பந்தை வலைக் குள் சேர்த்தார் ஹசார்ட். அதேபோல இப்போட்டியில் இதுவரை மூன்று கோல்களைப் போட்டு ஆக அதிக கோல்களைப் போடும் வீரருக்கான விருதை நோக்கிச் சென்றுகொண்டிருக் கிறார் பேல். பேல் கண்ணிமைக்கும் நேரத் தில் கோல் போடக்கூடியவர் அதிலும் ஃப்ரீகிக் வாய்ப்புகளை கோல்களாக மாற்றுவதில் அவர் நிபுணர். "வேல்சுக்கு எதிராக விளை யாடுவது எளிதான காரியமல்ல. அது ஒரு பலம் பொருந்திய குழு. மேலும் கோல் போடும் அபாரத் திறன்மிக்க தாக்குதல் ஆட்டக் காரரான கேரத் பேலை வேல்ஸ் கொண்டிருக்கிறது," என்றார் பெல்ஜியம் நட்சத்திரம் ஹசார்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!