‘துவக்கத்திலிருந்தே அசத்தவேண்டும்’

பாரிஸ்: சொந்த மண்ணில் ஐரோப்பிய கிண்ணத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற பிரான்சின் கனவு நனவாக வேண்டும் என்றால் ஆட்டத் தின் துவக்கத்திலிருந்தே சிறப் பாகவும் விழிப்புடனும் செயல் படவேண்டும் என்று அதன் முன்னாள் வீரர் பெட்ரிஸ் எவ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஆட்டத்தின் துவக்கத் திலிருந்தே விழிப்புடன் செயல் படாமல் வெற்றியை உறுதி செய்ய கடைசி நேரம் வரை காத்திருக்கும் பழக்கத்தை பிரான்ஸ் கொண்டிருக்கிறது.

எங்களையே நாங்கள் பயமுறுத் திக்கொள்கிறோம்," என்று அவர் குறை கூறினார். இந்தப் போக்கு நீடித்தால் கிண்ணப் பயணம் முடியும் ஆபத்து அதிகம் இருப்பதாக அவர் எச்சரித்தார். எதிரணி கோல் போட்டு முன்னிலை பெற்ற பிறகே பிரான்ஸ் அதிரடியாக விளையாட ஆரம்பிப்பதாக எவ்ரா அதிருப்தி தெரிவித்தார். நாளை இரவு நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஐஸ் லாந்தை பிரான்ஸ் சந்திக்கிறது. ஐஸ்லாந்து அணியை சுலபமாக வென்றுவிடலாம் என்று பிரெஞ்சு வீரர்கள் மெத்தனத் துடன் இருந்துவிடக்கூடாது என்று எவ்ரா கூறினார்.

வெற்றிக்காகப் போராடவிருக்கும் பிரான்சின் கிரிஸ்மனும் (இடது) ஐஸ்லாந்தின் சிகட்சனும். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!