‘இத்தாலியைப் பார்த்து பயப்படவேண்டும்’

போர்டோ: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிக்கான காலி றுதிச் சுற்றில் இன்றிரவு நடை பெறும் ஆட்டத்தில் இத்தாலியும் ஜெர்மனியும் மோதுகின்றன. உலகக் காற்பந்து அரங்கில் ஜெர்மனி ஜாம்பவானாக திகழ்ந் தாலும் முக்கிய போட்டிகளில் அது இத்தாலியை வென்றதில்லை. இந்த நிலை இன்றிரவும் தொடரும் என்று இத்தாலியின் முன்னாள் நட்சத்திரம் கிறிஸ்டியன் வியேரி நம்புகிறார்.

இந்தப் போட்டிக்குப் பலம் பொருந்திய குழுவை இத்தாலி அனுப்பியிருக்கிறது என்றும் அக்குழுவைப் பார்த்து ஜெர்மனி பயப்படவேண்டும் என்றும் வியேரி தெரிவித்தார். "அபாரத் திறன் கொண்ட கோல்காப்பாளரான புஃபோனையும் வலிமைமிக்க தற்காப்பு அரணையும் நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களை முறியடிக்க திட்டமிடும் மற்ற குழுக்களுக்குச் சிரமமே. எங்களுக்கு எதிராகக் கோல் போடுவது எளிதன்று. எங்கள் கோல் வலை நோக்கி பந்தை அனுப்பவதே சவால்மிக்கதாகும் "இத்தாலியின் சியேலினி, பொனுச்சி, பார்சாக்லி ஆகி யோரைப் போல சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களை வேறு எந்தக் குழுவும் கொண்டிருக்கவில்லை," என்றார் வியேரி.

இருப்பினும், ஜெர்மனிக்கு எதிரான ஆட்டம் சுலபமானதாக இருக்காது என்று வியேரி கருத்து தெரிவித்தார். வலிமைமிக்க ஜெர்மனிக்கு எதிராக இத்தாலிய வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் போராடுவர் என்று குறிப்பிட்ட வியேரி, கடைசி வரை போராடும் இத்தாலி வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இத்தாலி தலைநிமர்ந்து இருக்கும் என்று பெருமையுடன் கூறினார். இத்தாலியின் சில முக்கிய ஆட்டக்காரர்கள் காயம் காரண மாகக் களமிறங்க முடியாவிட்டாலும் பயிற்றுவிப்பாளர் கோன்டேயின் அபார வியூகங்கள் வெற்றிக்கு வித்திடும் என்று வியேரி முன்னுரைத்தார்.

வெற்றிப் பயணத்தைத் தொடரவேண்டும் என்ற வேட்கையுடன் ஜெர்மனிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்துக்கு முன்பு தீவிர பயிற்சியில் ஈடுபடும் இத்தாலி வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!