வேட்கையுடன் வேல்ஸ்

லீல்: ஆட்டம் தொடங்கி கால்மணி நேரத்திற்குள்ளாகவே பெல்ஜியத் திடம் முன்னிலையை விட்டுத்தந்த போதும் மனந்தளராது போராடி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி முதன்முறை யாக யூரோ கிண்ண அரையிறுதிக் குள் நுழைந்தது வேல்ஸ் அணி. பெல்ஜியம்=வேல்ஸ் காற்பந்து அணிகள் மோதிய 2வது காலிறுதி ஆட்டம் நேற்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. 13வது நிமிடத்தில் சுமார் 23 மீட்டர் தூரத் தில் இருந்து பெல்ஜியம் வீரர் ரட்யா நைங்கோலான் உதைத்த பந்து வேல்ஸ் கோல்காப்பாளர் வெய்ன் ஹெனசியைத் தாண்டி வலைக்குள் புகுந்தது.

இருப்பினும், கார்னரில் இருந்து வந்த பந்தை அணித் தலைவர் ஆஷ்லி வில்லியம்ஸ் மிக அழகாக வலைக்குள் முட்ட, இழந்த முன்னிலையை முதல் பாதியிலேயே ஈடுகட்டியது வேல்ஸ். முற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இன்னும் பல கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவை வீணடிக்கப்பட்டன. எந்தக் குழுவாலும் ஒப்பந்தம் செய்யப்படாத வேல்ஸ் ஆட்டக் காரர் ராப்சன் கானு இரண்டாம் பாதியின் பத்தாம் நிமிடத்தில் அருமையாக அடித்த கோலால் வேல்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். அதை அடுத்து, பதில் கோலடிக்க பெல் ஜியம் ஆட்டக்காரர்கள் பலவாறு முயன்றும் வேல்ஸ் தற்காப்புப் படை அவற்றைத் திறம்பட முறி யடித்தது.

காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் கோல்காப்பாளர் கோர்ட்டுவாவின் கைகளுக்கு எட்டாத வகையில் மிக லாவகமாக பந்தை வலைக்குள்த ள்ளி வேல்சின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்திய சேம் வோக்ஸ் (வலமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!