அரையிறுதிக்குள் ஜெர்மனி

போர்டோ: அனைத்துலகப் போட்டி களில் இதுவரை எட்டுமுறை இத்தாலியை வெல்ல முடியாமல் தவித்த ஜெர்மனி நேற்று அதிகாலை நடைபெற்ற மூன்றாவது காலிறுதியாட்டத்தில் இத்தாலி யைத் தோற்கடித்து அதன் ஏக்கத்தைப் போக்கிக்கொண்டது.

கூடுதல் நேரம் ஆடியும் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்ததால் வெற்றியைத் தீர்மா னிக்க பெனால்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் ஆறுக்கு ஐந்து என்ற கோல் கணக்கில் வென்று ஒன்பதாவது முயற்சியில் இத்தாலியைத் தோற்கடித்தது உலகக் கிண்ண வெற்றியாளருமான ஜெர்மனி.

27வது நிமிடத்தில் ஜெர்மனி யின் ஷ்வைன்ஸ்டைகர் தலையால் முட்டி பந்தை வலைக்குள் செலுத்தினார். ஆனால் இத்தாலிய ஆட்டக்காரரைத் தள்ளிவிட்ட தற்காக அந்தக் கோலை நிராகரித்தார் நடுவர்.

பிற்பாதியில் 65வது நிமிடத்தில் அபாரமான ஆட்டம் மூலம் தனது முதல் கோலைப் போட்டது ஜெர்மனி. மின்னல் வேகத்தில் அந்தக் கோலைப் புகுத்தியவர் மெசுட் ஓசில். ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்தபோது ஜெரோம் போட்டெங் பெனால்ட்டி பகுதியில் பந்தைக் கையால் தொட்டதால் இத்தாலிக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கினார் நடுவர். அதனைக் கோலாக்கி ஆட்டத்தைச் சமப்படுத்தினார் லியோனார்டோ பொனுச்சி.

முழுநேரம் சமநிலையில் முடிந்து கூடுதல் நேரத்திலும் இருதரப்பும் கோல் போடவில்லை. எனவே, எந்தக் குழுவுக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கும் பெனால்ட்டி வாய்ப்புகள் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட வேண்டிய நிலை உருவானது.

ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெர்மனியின் கோல் காப்பாளர் நியூவரை நோக்கி ஆனந்தத்துடன் ஓடிவரும் ஜெர்மன் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!