ஐஸ்லாந்தின் கனவைக் கலைத்த பிரான்ஸ்

பாரிஸ்: ஐஸ்லாந்தின் ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிப் பயணத்துக்கு பிரான்ஸ் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஐஸ்லாந்தை 5=2 எனும் கோல் கணக்கில் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் புரட்டி எடுத்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத் திலேயே ஒலிவியர் ஜிரூ பிரான்சை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆட்டத்தின் துவக்கத் திலேயே தங்களுக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியிலிருந்து ஐஸ் லாந்து வீரர்களும் ரசிகர்களும் மீள்வதற்குள் பிரான்சின் இரண் டாவது கோல் புகுந்தது. 19வது நிமிடத்தில் ஐஸ்லாந் தின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்தை பால் பொக்பா தலையால் முட்டி வலைக் குள் சேர்த்தார்.

இடைவேளைக்கு இரண்டு நிமிடங்கள் மட்டும் இருந்தபோது டிமிட்ரி பாயட் பிரான்சின் மூன்றாவது கோலைப் போட்டார். ஆட்டத்தின் முதல் பாதியில் இதற்கு மேல் நிலைமை மோசமாக வாய்ப்பில்லை என்று கையைப் பிசைந்துகொண்டு இடைவேளைக் குக் காத்துக்கொண்டிருந்த ஐஸ் லாந்துக்குப் பேரிடி விழுந்தது. இடைவேளைக்கு வினாடிகளே இருந்தபோது ஐஸ்லாந்தின் பெனால்டி எல்லை நோக்கி பந்து அனுப்பப்பட்டது. ஏற்கெனவே அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்த ஐஸ்லாந்து தற்காப்பு ஆட்டக்காரர் களைப் புயல் வேகத்தில் கடந்து சென்ற அன்டோய்ன் கிரிஸ்மன் பந்தை வலைக்குள் சேர்த்தார். பந்து வலைக்குள் போவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று கிரிஸ்மனை நோக்கி விரைந்த ஐஸ்லாந்து கோல்காப் பாளரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இடைவேளையின்போது பிரான்ஸ் 4-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. நான்கு கோல்கள் போட்டு முன் னிலை வகித்த பிரான்ஸ் இனி தோல்வி அடைய சாத்தியமில்லை என்ற நம்பிக்கையுடன் பிரெஞ்சு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். ஆனால் நான்கு கோல்களை விட்டும் துவண்டுவிடாமல் போ ராடிய ஐஸ்லாந்து ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோல் போட்டது. பிரான்சின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்து மீது பாய்ந்த கோல்பின் சிதோர்சன் கோல் போட்டார். ஆனால் நான்கு நிமிடங்கள் கழித்து பிரான்ஸ் அதன் ஐந்தாவது கோலைப் போட்டது.

கோல் மழை பொழிந்து கொண்டாட்டத்தில் இறங்கிய பிரெஞ்சு வீரர்கள். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!