‘சிறப்பாக விளையாடுவோம்’

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் செல்லத் தயாராக இருந்தது. முதல் போட்டி 21ஆம் தேதி நார்த் சவுண்டில் தொடங்கி, ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணி தலைவர் விராத் கோஹ்லி, தலைமை பயிற்சியாளருடன் இணைந்து இப்பயணம் குறித்து பேட்டியளித்தார். அப்போது விராத் கோஹ்லி, "அணிகளுக்கான தரவரிசை என்பது வெறும் ஊக்கம்தான்.

"நாம் தொடரை வென்றால், முதல் இடத்திற்கு முன்னேறு வோம். இது நமக்கும் சிறந்ததாக இருக்கும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இந்தியாவில் விளையாடி னாலும் வெளிநாட்டில் விளையாடி னாலும் எங்களுடைய முன்னுரிமை வெற்றிக்குத்தான். "ஒவ்வொரு தொடருக்கும் இந்திய அணி ஒரே மாதிரியான முக்கியத்துவம்தான் கொடுக்கும். புதிய பயிற்சியாளருடன் உணர்வு பூர்வமான தொடர்புள்ளதால் இந்தத் தொடர் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகும்," என்றார். இத்தொடருக்கான இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை 6 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

இந்திய அணி வீரர்கள்: கோஹ்லி, ரகானே, தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விர்த்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ‌ஷர்துல் தாக்கூர். இந்திய அணி 5 ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல் கிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்டில் விளையாடி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே கடைசியாக 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடர் நடந்தது. டெஸ்ட் தொடருக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி ஊதிய பிரச்சினையில் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!