‘ஜெர்மனியை வீழ்த்த முழு முயற்சி செய்வோம்’

பாரிஸ்: யூரோ காற்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் நாளை மறுநாள் நடைறவுள்ள ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது பிரான்ஸ். "நாங்கள் உலகின் சிறந்த காற்பந்து அணியுடன் மோதப் போகிறோம்," என்று கூறியுள்ளார் பிரான்ஸ் அணியின் நிர்வாகி டெஸ்சாம்ப்ஸ். ஆனால், தனது அணி உலகின் சிறந்த அணியை வெல்லும் என்று தான் நம்பு வதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஐஸ்லாந்து அணியை 5=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி யது போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ்.

காலிறுதியில் இத்தாலியை பெனால்ட்டி வாய்ப்பில் 6-5 என வீழ்த்தி ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது. இத்தாலியுடனான ஆட்டத்தின் போது ஜெர்மனி மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களைப் பயன்படுத்தி யது. எனவே ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அணியின் வியூகத்தை மாற்றப்போகிறாரா என்பது பற்றி கூற பிரான்சின் நிர்வாகி மறுத்துவிட்டார். "கோல்காப்பாளர் முதல் தற்காப்பு, தாக்குதல் ஆட்டக்காரர் கள் வரை ஜெர்மனி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துகிறார்கள்.

"இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஜெர்மனிக்கு சிறிதளவு பயம் இருந்தாலும் அவர்களது முன்னேற்றம் அவர் களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது," என்றார் டெஸ்சாம்பஸ். "இதுவரை எங்களது பெரும் பாலான எதிரணியினர் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். ஆனால், -ஜெர்மனியை பொறுத்த வரை அவ்வாறு இருக்காது. "அவர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் விளையாடி, நாங்கள் அவர்களை தற்காப்பில் கவனம் செலுத்த செய்தால், எங்களுக்கு அது நல்லதாக அமையும். "ஜெர்மனியை வீழ்த்த நாங்கள் முழு மூச்சுடன் போராடுவோம். நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான ஒன்று," என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நட்புமுறை ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதியது. அதில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!