போர் முரசு கொட்டும் பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்கள்

மார்சே: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு பிரான்ஸ் தகுதி பெறவேண்டுமாயின் இன்றிரவு நடைபெறும் அரையிறுதியில் அது பலம் பொருந்திய ஜெர்மனியைத் தோற்கடிக்கவேண்டும். 1958ஆம் ஆண்டிலிருந்து காற்பந்துப் போட்டிகளில் ஜெர்மனி யை பிரான்ஸ் வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், 1982லும் 1986லும் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளின் அரையிறுதிகளில் நட்சத்திரப் பட்டாளத்துடன் மின்னிய பிரான்சை ஜெர்மனி தோற்கடித்து வெளியேற்றியது பிரெஞ்சு ரசிகர் களின் மனதிலிருந்து நீங்கா ரணமாக இன்று வரை இருந்து வருகிறது.

இவ்விரு அணிகளும் ஆகக் கடைசியாகக் கடந்த நவம்பர் மாதத்தில் நட்புமுறை ஆட்டத்தில் பொருதின. பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் அந்த ஆட்டம் நடை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் அந்நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. விளையாட் டரங்கத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப் பட்டது. ஆனால் விளையாட்டரங் கத்துக்குள் நுழைய முடியாமல் போக, பயங்கரவாதிகள் வெடி குண்டை அதற்கு வெளியிலேயே வெடிக்கச் செய்தனர். அதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றிரவு நடத்தப்படும் ஆட்டத் தில் எந்தக் குழு வெற்றி பெறும் என்று முன்னுரைப்பது சிரமம். போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் காலிறுதியில் சக்கை போடு போட்டது. 'நாக் அவுட்' சுற்றில் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஐஸ்லாந்தை பிரான்ஸ் பந்தாடியது. அந்த ஆட்டம் 5-2 எனும் கோல் கணக்கில் பிரான்சுக்குச் சாதக மாக முடிந்தது.

வெற்றிக்குக் குறி வைத்துள்ள ஜெர்மனியின் தாமஸ் மியூலர் (இடது), பிரான்சின் அன்டோய்ன் கிரிஸ்மன் (வலது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!