டி20 கிரிக்கெட்: இலங்கையைப் புரட்டி எடுத்த இங்கிலாந்து

சவுதாம்ப்டன்: இலங்கைக்கு எதி ரான டி20 கிரிக்கெட் ஆட்டத்தை இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. 73 ஓட்டங்கள் குவித்து ஆட்ட மிழக்காத ஜாஸ் பட்லர் இங்கி லாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். பட்லரின் இந்த அபார ஆட்டம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் அணித் தலை வர் மோர்கன் 47 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பூவா தலையாவில் வென்ற இலங்கை பந்தடிக்க முடிவு செய்தது. சீரான இடைவெளியில் அதன் விக்கெட்டுகள் சரிய, இலங்கை வீரர்கள் செய்வதறியாது தவித் தனர். வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையுடன் போராடிய இலங் கை வீரர்கள் அதிக ஓட்டங்கள் எடுக்காதபடி இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் கவனித்துக் கொண்டனர். இலங்கை 20 ஓவர்களில் 140 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குணதிலகா 26 ஓட்டங்களும் சண்டிமால் 33 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்தின் ஜோர்டனும் டோசனும் தலா 3 விக்கெட்டு களைக் கைப்பற்றினர். 141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கி லாந்து களமிறங்கியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!