மேன்யூவில் ஆர்மீனிய வீரர்

மான்செஸ்டர்: ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழு விற்காக விளையாடி வந்த ஆர்மீனிய நாட்டின் ஹென்ரிக் மகிதார்யான், 27, மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவுடன் நான்காண்டு ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்டுள்ளார். மத்தியத் திடல் ஆட்டக்காரரான இவர் தாக்குதலிலும் ஆதிக்கம் செலுத்தும் திறமை படைத்தவர். கடந்த மூன்று பருவங்களில் பொருஸியா குழு சார்பில் 140 போட்டிகளில் களமிறங்கிய இவர் 41 கோல்களையும் அடித்துள்ளார்.

2015-=16 பருவத்தில் 23 கோல் களைப் புகுத்தியதோடு 32 கோல் களுக்கும் அச்சாரமிட்டார். இத னால் ஜெர்மன் லீக்கான 'புண்டஸ் லீகா'வில் விளையாடும் சக வீரர் களால் கடந்த பருவத்தின் சிறந்த ஆட்டக்காரராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார். "மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் இணைந்துள்ளது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. இதன் மூலம் நீண்டநாள் கனவு நனவாகி இருக்கிறது. ஒப்பற்ற வரலாற்றுப் பெருமைக்குரிய யுனைடெட் குழு விற்காகக் களமிறங்குவதற்கு மிக ஆவலுடன் இருக்கிறேன். இந்தக் குழுவுடனான எனது பந்தம் நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கும் என்றும் நம்புகிறேன்," என்றார் மகிதார்யான். தற்காப்பு வீரர் எரிக் பெய்லி, தாக்குதல் ஆட்டக்காரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச் ஆகியோர் ஏற் கெனவே யுனைடெட்டுடன் ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஹென்ரிக் மகிதார்யான். படம்: மான்செஸ்டர் யுனைடெட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!