கனவு மெய்ப்படும் தூரத்தில் போர்ச்சுகல்

லியோன்: உலகின் தலைசிறந்த காற்பந்து ஆட்டக்காரர் விருதை மூன்று முறை வென்றுள்ளபோதும் நடப்பு யூரோ தொடரின் காலிறுதிச் சுற்று வரை போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றங்களை எல்லாம் துடைத்தெறியும்விதமாக அமைந் தது அரையிறுதியில் ரொனால்டோ வெளிப்படுத்திய ஆட்டம். வேல்ஸ் அணிக்கெதிராக நேற்று அதிகாலை நடந்த அரை இறுதிப் போட்டியின் முதல் பாதி யில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலிக்கவில்லை.

ஆயினும், பிற்பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் பந்தைத் தலையால் முட்டி அற்புத மான கோலை அடித்து தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ரொனால்டோ. இந்த அதிர்ச்சியில் இருந்து வேல்ஸ் வீரர்கள் மீள்வதற்குள் போர்ச்சுகல் இன்னொரு கோலை யும் புகுத்தியது. இம்முறையும் அதற்கு அச்சாரம் போட்டது ரொனால்டோதான். அவர் உதைத்த பந்தை சற்று திசைதிருப்பி வலைக்குள் தள்ளி விட்டார் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் நானி. பதில் கோல்கள் அடிக்க வேல்ஸ் ஆட்டக்காரர்கள் பெரு முயற்சி மேற்கொண்டபோதும் அது ஈடேறாமல் பார்த்துக்கொண் டது போர்ச்சுகலின் தற்காப்பு வரிசை. வேல்ஸ் குழுவின் நட்சத் திர வீரரான கேரத் பேல் ஒரு சில முறை பந்தை எதிரணி வலையை நோக்கி உதைத்தபோதும் பந்து நேராக கோல்காப்பாளர் கைகளை நோக்கியே சென்றது.

ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் போர்ச்சுகலின் முதல் கோலை முட்டிய ரொனால்டோ. ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!