கோல் நாயகன் கிரீஸ்மன்; இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்

மார்சே: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் தகுதி பெற் றுள்ளது. உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றி யாளரான ஜெர்மனியை அது நேற்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் தோற் கடித்தது.

பிரான்சின் இரண்டு கோல் களையும் அதன் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் அன் டோய்ன் கிரீஸ்மன் போட்டார். இப்போட்டியில் ஆக அதிக கோல்களைப் போட்ட வீரர்கள் பட்டியலில் இதுவரை ஆறு கோல்களைப் போட்டுள்ள கிரிஸ்மன் முன்னிலை வகித்து வருகிறார். ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரண்டு குழுக்களும் கோல் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டன. ஜெர்மன் தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து சென்ற கிரீஸ்மன், வலை நோக்கி பந்தை அனுப்பினார். ஆனால் கிரிஸ்மனின் இந்த முயற்சி கோலாகாதபடி ஜெர்மனியின் கோல்காப்பாளர் நோயார் பார்த்துக் கொண்டார்.

ஜெர்மனியும் பதிலுக்கு கோல் முயற்சியில் இறங்கியது. பிரான் சின் கோல்காப்பாளர் மட்டும் கொஞ்சம் அசந்திருந்தால் ஜெர்மனி முன்னிலை வகித்திருக்கும். இந்நிலையில், இடைவேளைக்கு வினாடிகளே எஞ்சியிருந்தபோது ஜெர்மனியின் பேஸ்டியன் ஸ்வைன்ஸ்டைகர் சொந்த பெனால்டி எல்லைக்குள் தற் காப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரது கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதற்கு ஜெர்மன் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் நடுவர் தாம் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் கிரீஸ்மன். இதுவே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இடைவேளையின்போது பிரான்ஸ் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஜெர்மனிக்கு எதிராக இரண்டாவது கோலைப் போட்ட மகிழ்ச்சியைத் தமது சக வீரர்களுடன் கொண்டாடும் அன்டோய்ன் கிரீஸ்மன் (நடுவில்). அரையிறுதியில் ஜெர்மனியைத் தோற்கடித்த பிரான்ஸ், வரும் திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலுடன் மோதுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!