வெற்றியை போர்ச்சுகீசியருக்கும் போர்ச்சுகீசியக் குடியேறிகளுக்கும் அர்ப்பணித்த ரொனால்டோ

யூரோ 2016ல் தாமும் தமது சக வீரர்களும் கண்ட வெற்றியை போர்ச்சுகீசியருக்கும் உலகில் உள்ள மற்ற நாடுகளில் வசிக்கும் போர்ச்சுகீசியக் குடியேறிகளுக்கும் அர்ப்பணிப்பதாக போர்ச்சுகலின் நட்சத்திர வீரரும் அணித் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இறுதி ஆட்டத்தின்போது காயம் அடைந்தபோதிலும் தொடர்ந்து விளையாட தாம் முயற்சி செய்ததாக அவர் கூறினார்.

"திரும்பவும் திடலுக்கு வந்து விளையாட முயன்றேன். ஆனால் எனது முழங்கால் மிகவும் வீங்கியிருந்தது. என்னால் ஆட்டத்தைத் தொடர முடியவில்லை. வலியால் துடித்தேன். இறுதி ஆட்டத்தில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. இருப்பினும், ஆட்டத்தின் முடிவு எனக்குச் சொல்லில் அடங்கா மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நாங்கள் வென்றுள்ள கிண்ணம் அனைத்து போர்ச்சுகீசியருக்கும் மற்ற நாடுகளில் வசிக்கும் போர்ச்சுகீசியக் குடியேறிகளுக்கும் சொந்தமானது," என்றார் ரொனால்டோ. பிரான்சில் ஏறத்தாழ 1.2 மில்லியன் போர்ச்சுகல் நாட்டவரும் போர்ச்சுகீசிய வம்சாவளியினரும் வசித்து வருவதாக நம்பப்படுகிறது.

முழங்காலில் கட்டுடன் திடலுக்கு வெளியில் இருந்து சக வீரர்களுக்கு வழிகாட்டி, ஊக்கமளிக்கும் ரொனால்டோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!