முதல்முறை மகுடம் சூடிய போர்ச்சுகல்

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்சை போர்ச்சுகல் தோற்கடித்து கிண்ணத்தை வென் றுள்ளது. ஐரோப்பியக் கிண்ணம் மட்டுமல்லாது பிரதான காற்பந்துப் போட்டி ஒன்றை போர்ச்சுகல் வென்றிருப்பது இதுவே முதல் முறை. கூடுதல் நேரத்தில் போர்ச்சு கலின் எடேர் போட்ட அபார கோல் அந்நாட்டு மக்களைக் கொண்டாட் டத்தில் மூழ்க வைத்துள்ளது.

ஆட்டத்தின் 24வது நிமிடத் திலேயே காயம் காரணமாக போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ வெளியேறினார். இருப்பினும், தங்களுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராப் பின்னடைவு பிரான்சுக்கு சாதகமாக முடிந்து விடக்கூடாது என்று முனைப்புடன் விளையாடியது போர்ச்சுகல்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லாமல் 90 நிமிடங்களிலேயே வெற்றி பெற பிரான்சுக்குப் பல பொன்னான வாய்ப்புகள் கிடைத் தன. ஆனால் வலிய வந்த வாய்ப்புகளை அதன் வீரர்கள் நழுவவிட்டனர். அரையிறுதியில் ஜொலித்த பிரான்சின் கிரீஸ்மன் மட்டும் தமக்குக் கிடைத்த பல வாய்ப்பு களில் ஏதேனும் ஒன்றையாவது வலைக்குள் சேர்த்திருந்தால் கிண்ணம் பிரான்சுக்குச் சொந்த மாகியிருக்கும்.

பிரான்சின் அதிரடி ஆட்டத்துக்குத் துளியளவும் வளைந்து கொடுக்காமல் போராடிய போர்ச்சுகல் இறுதியில் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தியது. கிண்ணம் ஏந்தும் மகிழ்ச்சியை முதல்முறையாக சுவைக்கும் போர்ச்சுகீசிய வீரர்கள். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!