சென்னையில் காற்பந்து விளையாடும் ரொனால்டினியோ

முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிமியர் புட்ஸால் காற்பந்து போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. இது உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் 5 வீரர்களைக் கொண்ட நடத்தப்படும் போட்டி ஆகும். இந்த புட்ஸால் காற்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களாக பால்கோ, ரயன் கிக்ஸ், ஹெர்னன் கிரேஸ்போ, பால் ஸ்கோல்ஸ், ரொனால்டினியோ ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் 'ஏ' பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும் 'பி' பிரிவில் கோவா, கோல்கத்தா, பெங்களூரு அணிகளும் இடம் பெற்றுள்ளன.

போட்டிகள் சென்னை மற்றும் கோவாவில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி 24ஆம் தேதி கோவாவில் நடத்தப்படுகிறது. சென்னை அணியில் பிரேசிலைச் சேர்ந்த பால்கோ இடம்பெற்றுள்ளார். பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டினியோ கோவா அணிக்காக விளையாடுகிறார். ரயன் கிக்ஸ் மும்பை அணியிலும் ஹெர்னன் கிரெஸ்போ கோல்கத்தா அணியிலும் பால் ஸ்கோல்ஸ் பெங்களூரு அணியிலும் நட்சத்திர வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடருக்காக முதன் முதலில் ஒப்பந்தமான நட்சத்திர வீரரான லூயிஸ் டெகோ காயம் காரணமாக முதல் சீசனில் விலகியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!