‘வெற்றிக்கு பொறுமை அவசியம்’

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரை வெல்ல பொறுமை அவசியம் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆடுகளம் மெதுவானது, சோர் வூட்டக்கூடியது, அதனால் தன் பந்துவீச்சும் அந்த அளவுக்கு நிதானப்போக்கையே கடை பிடிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். பிசிசிஐ இணையத்தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "கடுமையான வெப்பம், மந்தமான ஆடுகளம், நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஒரு சவால்தான். "பயிற்சி ஆட்டத்தின்போது ஆடுகளத்தில் பந்துகள் ஆடி அசைந்து நிதானமாக வருவதைத் தான் பார்த்தேன். எனவே நான் பொறுமையுடன் நாள் முழுதும் வீசவேண்டும். "ஆடுகளத்தில் பந்து சுழல ஆரம்பித்தால் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு திரும்ப முடியும், அதுவரையில் பொறுமையே கை கொடுக்கும். இதனால் சோர்வு ஏற்பட்டாலும் கவலையில்லை. மேலும் அது தவிர்க்க முடியாத ஒன்று.

"முதல் பயிற்சி ஆட்டத்தில் அமித் மிஸ்ரா 15=16 ஓவர்கள் வீசியும் விக்கெட்டுகள் விழ வில்லை. ஆனால் ஒரு திருப்பு முனை கிடைத்தது. சீரான இடை வெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். "எனவே முதல் 2 அல்லது 3 நாட்களுக்குக்கூட பந்து வீச்சாளர் களுக்கு இங்கு வாய்ப்பிருக்காது போலத் தெரிகிறது. ஆகவே பந்தடிப்பாளர் தவறு செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதுதான். "பயிற்சியின்போது அனில் கும்ளே பந்துவீசுவதைப் பார்த் தேன் அது மிக்க பயனளித்தது. நான் குறிப்புகளும் எடுத்து வருகிறேன். "அவர் அணி வீரர்களிடையே ஒரு உன்னிப்பான கவனத்தை உருவாக்கியுள்ளார். சரியான நேரத்தில் வலைப் பயிற்சிக்கு வருகின்றனர். இது சில காலங்களாக நடைபெறாத ஒன்று. "இதுவரை எனக்கு அவர் பெரிய அளவில் தன்னம்பிக்கை யையும் பொறுப்பையும் அளித்து உள்ளார். அதாவது நான் என் திறமைகளைச் சூழ்நிலைகளை கண்டு தயங்காமல் வெளிப் படுத்துவதற்கான ஊக்கமாகும் இது," என்று கூறினார் அஸ்வின்.

இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!