சேம் அலர்டைசுக்கு நிர்வாகியாகும் வாய்ப்பு

யூரோ 2016 காற்­பந்­துப் போட்டி களின் காலி­று­திக்கு முந்தைய சுற்­றி­லி­ருந்து இங்­கி­லாந்து வெளி­யே­றி­ய­பின் அடுத்த இங்­கி­லாந்து காற்­பந்து நிர்வாகியைத் தேடும் பணியில் அந்நாட்டு காற்­பந்து சங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்­சினை­யில் இங்­கி­லாந்து காற்­பந்­துச் சங்கம் இங்­கி­லாந்து நாட்­ட­வர் ஒரு­வரைத் தான் அடுத்த நிர்­வா­கி­யாக நிய­மிக்­கப்­போ­வ­தாக தெரி­விக்­காத நிலையில், சண்டர்­லேண்ட் குழு வின் நிர்­வா­கி­யான சேம் அலர்டைஸ்­தான் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­படு­கிறது. இவரைப் பற்றிக் கூறும் மான்­செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்­கு­சன், "சரியான நபர் பற்றிக் கூறுவது மிகவும் கடினம். ஏனெனில், பிரி­மி­யர் லீக்கில் இங்­கி­லாந்து நிர்வாகிகள் என்றால் மூவர்தான் உள்­ள­னர். "சேம் அலர்டை­சின் அனு­ப­வத்தை வைத்துப் பார்க்­கும்­போது அவரை­விட தேர்வு பெறத் தகு­தி­யா­ன­வர் யாரு­மில்லை," என்று புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார். 10 ஆண்­டு­களுக்கு முன்னர் இவர் இங்­கி­லாந்து காற்­பந்து குழு நிர்­வ­கிப்­பது குறித்து சங்கம் ஆராய்ந்தது. ஆனால், அப்போது இவ­ருக்கு பதிலாக மற்றொரு இங்­கி­லாந்த­வ­ரான ஸ்டீவ் மெக்­ளே­ரன் நிர்­வா­கி­யாக நிய­மிக்­கப்­ பட்­டார்.

ஸ்டீவ் மெக்­ளே­ரன் தலைமை­யில் இங்­கி­லாந்து அணி யூரோ 2008 காற்­பந்­துப் போட்­டி­களுக்கு தகுதி பெற தவ­றி­யது. ஆனால், இதற்கு முன்னரே இங்­கி­லாந்து அணியின் எதிர்­கா­லம் குறித்­துக் கருத்­துரைத்த சேம் அலர்டைஸ், "இங்­கி­லாந்து அணி அதல பாதா­ளத்­துக்­குச் சென்று கொண்­டி­ருக்­கிறது," என்றார். ஸ்டீவ் மெக்­ளே­ரனை தேர்ந்­தெ­டுத்­த­போது சேம் அலர்டைஸ் கூறிய வார்த்தை­கள் இன்­ன­மும் பலரது காது­களில் கணீரென ஒலிக்­கின்றன. "பிரச்­சினை இப்­பொ­ழுது தெரியாது, எதிர்­கா­லத்­தில்­தான் அது தெரி­ய­வ­ரும்," என்று ஆருடம் கூறினார் 'பிக் சேம்' என தனது பெரிய உருவம் கார­ண­மாக பல­ரா­லும் அழைக்­கப்­படும் சேம் அலர்டைஸ்.

இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சேம் அலர்டைஸ். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!