டேவிஸ் கிண்ணம்: ராம்குமார் வெற்றி

இந்தியாவில் நடைபெற்று வரும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் அறிமுக வீரர் ராம் குமார் ராமநாதன் தென்கொரிய வீரரை வீழ்த்தியதால் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆசியா/ஓசியானியா அரை யிறுதி முதல் பிரிவில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதி வருகின்றன. சண்டிகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத் தில் ஒற்றையர் பிரிவில் இந்தியா வின் அறிமுக வீரரான ராம்குமார் ராமநாதன் தென்கொரியாவின் சியோங் சான் ஹாங்கை எதிர் கொண்டார். இதில் இருவரும் ஒருவருக் கொருவர் ஈடுகொடுத்து சம பலத்துடன் விளையாடினார்கள். இதனால் ஆட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

முதல் செட்டை ராம்குமார் 6-3 என எளிதில் வென்றார். ஆனால் 2வது செட்டை 2-6 என இழந்தார். 3வது செட்டை 6-3 எனக் கைப் பற்றினார். 4வது செட்டை கைப்பற்றினால் வெற்றி பெற்றுவிடலாம் என்று ராம்குமார் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினார். இவருக்கு தென்கொரிய வீரர் கடும் சவாலாக இருந்தார். ஆனால், ராம்குமார் 6-5 என முன்னிலையில் இருக்கும்போது தென்கொரிய வீரர் சியோங் சான் ஹாங் காயம் காரணமாக வெளி யேறினார். இதனால் ராம்குமார் வெற்றி பெற்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!