போக்பாவுக்கு யுனைடெட் குறி

மான்செஸ்டர்: பிரான்சின் நட்சத்திர வீரர் பால் போக்பாவை 105 மில்லியன் பவுண்ட்டுக்கு இவ்வார இறுதியில் ஒப்பந்தம் செய்ய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஜாம்ப வானான மான்செஸ்டர் யுனைடெட் ஏற்பாடுகள் செய்து வருவதாக பிரிட்டனின் 'தி சன்' நாளிதழ் தெரிவித்துள்ளது. இத்தாலிய லீக்கில் போட்டி யிடும் யுவெண்டசிடமிருந்து போக்பாவை வாங்க, அவரது நிர்வாகியிடம் இணக்கம் காணப் பட்டதை அடுத்து ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது.

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள போக்பா வாரத்துக்கு 202,000 பவுண்ட் வருமானம் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டால் உலகின் ஆக அதிகச் சம்பளம் ஈட்டும்- காற்பந்து ஆட்டக் காரர் என்ற பெருமை போக்பாவைச் சேரும். அதுமட்டுமல்லாது இவ்வார இறுதியில் ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டால் வரும் செவ்வாய்க் கிழமையன்று மருத்துவப் பரிசோ தனைக்காக போக்பா மான்செஸ்டர் அடையக்கூடும் என்று கூறப்படு கிறது. இந்நிலையில், செல்சியை விட்டுச் செல்ல அக்குழுவின் உரிமையாளர் ரோமன் அப்ரா மோவிச், நிர்வாகி அன்டோனியோ கோன்டே ஆகியோரிடம் டியேகோ கோஸ்டா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பால் போக்பாவை (இடது) ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் முழுமூச்சுடன் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டியேகோ கோஸ்டாவையும் (கீழ் இடப்படம்) ரியாட் மாரெசையும் (கீழ் வலப்படம்) முறையே செல்சியும் லெஸ்டரும் தக்கவைத்துக்கொள்ள போராடுகின்றன. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!