முதல் ஆட்டத்தில் வெற்றியைச் சுவைத்த மொரின்யோ

விகன்: மான்செஸ்டர் யுனை டெட்டின் புதிய நிர்வாகி என்கிற முறையில் ஜோசே மொரின்யோ தமது முதல் ஆட்டத்தில் வெற்றி யைச் சுவைத்துள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக்குக்குத் தகுதி பெற்றிருக்கும் விகனுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் யுனைடெட் 2-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. முதல்பாதி ஆட்டம் கோல் ஏதுமின்று சமநிலையில் முடிந்தது. இதனை அடுத்து, பிற்பாதி தொடங்கி சில நிமிடங்களில் யுனைடெட் இரண்டு கோல்களைப் போட்டு விகனின் கதையை முடித்து வைத்தது.

யுனைடெட்டின் வில் கீனும் ஆன்ட்ரியாஸ் பெரேராவும் கோல் போட்டனர். இந்த ஆட்டத்தில் யுனைடெட் முழு பலத்துடன் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியிலும் கோப்பா அமெரிக்கா காற்பந்துப் போட்டியிலும் தங்கள் நாடுகளுக்காகக் களமிறங்கிய வீரர்கள் இன்னும் யுனைடெட் டுக்குத் திரும்பாததே இதற்குக் காரணம். நட்சத்திர வீரர்கள் பலர் இல்லாதபோதிலும் எவ்வித பிரச்சினையும் இன்றி விகனை யுனை டெட் வென்றுள்ள தால் அடுத்த பரு வத்தில் யுனைடெட் பல சாதனைகளைப் படைக்கத் தயாராக உள்ளது என்ற நம் பிக்கை ரசிகர் களுக்குப் பிறந் துள்ளது.

கோல் போட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடும் (இடமிருந்து வலம்) ஆன்ட்ரியாஸ் பெரேரா, எரிக் பைலி, யுவான் மாட்டா. ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!