இங்கிலாந்தைத் தோற்கடித்த பாகிஸ்தான் அணி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதி ராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் கைப் பற்றியுள்ளது. அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. பாகிஸ்தானின் வெற்றிக்கு அதன் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா வித்திட்டார். 10 விக்கெட்டுகளைச் சாய்த்த ஷா இங்கிலாந்து வீரர்களைத் திக்குமுக்காட வைத்தார்.

பணம் வாங்கிக்கொண்டு போட்டியின் முடிவை முன்கூட் டியே நிர்ணயிக்கும் குற்றத்தின் பேரில் குற்றவாளி எனத் தீர்ப் பளிக்கப்பட்டு ஐந்து ஆண்டுத்தடை விதிக்கப்பட்ட பாகிஸ் தானின் முகம்மது அமீர் தண்ட னைக் காலம் முடிந்து இந்த ஆட்டத்தில் முதல்முறையாகக் களமிறங்கினார். இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை இவர் சாய்த்தார். 283 ஓட்ட இலக்கை விரட்டிக் கொண்டிருந்த இங்கி லாந்து 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. வோக்ஸ் 11 விக்கெட்டுகளைச் சாய்த்தும் இங்கிலாந்தால் தோல்வியி லிருந்து தப்ப முடியவில்லை. இந்த வெற்றி மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்று முன்னிலை வகிக் கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!