ரொனால்டினோ கோல் மழை

சென்னை: இந்தியப் பிரிமியர் ஃபுட்சால் போட்டியில் கோவா குழுவுக்காக விளையாடும் பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ (படம்) தமது அபாரத் திறன் களை இன்னும் இழக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு குழு வை எதிர்த்துக் களமிறங்கிய கோவா அணி 7-2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோவாவின் வெற் றிக்கு ரொனால்டினோ போட்ட ஐந்து கோல்கள் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையன்று.

மான்செஸ்டர் யுனைடெட் டின் முன்னாள் ஆட்டக்காரரான பால் ஸ்கோல்ஸ் பெங்களூருவுக்கு விளையாடியும் ரொனால்டினோவின் அதிரடி ஆட்டத் துக்கு அவரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஸ்கோல்சுக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் விளையாட் டரங்கத்துக்கு மான்செஸ்டர் யுனைடெட் சீருடையை அணிந்து வந்திருந்தபோதிலும் ரொனால்டினோவின் ஜாலங் களைப் பார்த்து கட்சித் தாவினர். ஆட்டத்தைத் தமது கட்டுக் குள் வைத்துக்கொண்ட ரொனால்டினோ ஐந்து கோல் கள் போட்டது மட்டுமல்லாமல் கொண்டாட்டத்திலும் புதுமையைக் காட்டி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!