பெண்கள் ஹாக்கி: இந்தியா தோல்வி

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்க வுள்ள இந்திய அணி, அதற்கு முன் அமெரிக்கா, கனடா நாட் டிற்கு எதிராக 'லீக்' தொடரில் விளையாட முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று அதிகாலை நடந்தது. அந்த ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் அமெரிக்க வீராங் கனை கேத்லீன் ஷர்கே முதல் கோலைப் பதிவு செய்தார். இதற்குப் பதில் கோல் அடிக்க இந்திய வீராங்கனைகள் முயற்சி செய்தனர். ஆனால், அமெரிக்காவின் தடுப்பு வீராங்கனைகள் இந்தியா வின் முயற்சியை வீணடித்தனர்.

இதனால் முதல் பாதி நேரத்தில் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதி நேரம் தொடங்கியதும் ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் அமெரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திய அந்நாட்டு வீராங்கனை கேதி பாம் கோல் அடித்தார். இந்த இரண்டு கோல்களுக்கும் பதிலடியாக இந்திய வீராங்கனை கள் ப்ரீத்தி டபேய், தீபிகா இரண்டு கோல்கள் அடித்தனர். ஆனால், 48வது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனை கெல்சே கோலடித்தார். இதற்கு பதில் கோல் அடிக்காததால், இந்தியா 2=3 எனத் தோல்வியடைந்தது. அமெரிக்காவிற்கு எதிரான 2வது போட்டி நாளை நடக்க இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!